Skip to main content

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி எம்.பி.!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Jyoti Mani MP thanks Chief Minister MK Stalin

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எமது கரூர் தொகுதிக்கு இன்று (24/08/2021) தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள். கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி மற்றும் புஞ்சைபுகளூர் பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கரூரில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

 

கரூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும். கரூர் மார்க்கெட் மேம்படுத்தப்படும். மணப்பாறையில் பழைய தேக்க திடக்கழிவுகள் அகற்றப்படும்.

 

இவ்வளவு சிறப்பான திட்டங்களை எமது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வழங்கியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவுக்கும் மனமார்ந்த நன்றிகள்!" எனத் தெரிவித்துள்ளார். 

 

கரூர் மக்களவை தொகுதியின் வளர்ச்சிக்காக ஜோதிமணி எம்.பி., சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு வழங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்