Skip to main content

320 வீரர்கள்; 1000 காளைகள்; அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

A jallikattu competition is going on in Avaniya Puram

 

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறும். 

 

பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும் அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு இணையதளத்தில் நடந்தது. சுற்றி இருக்கும் மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். 

 

அந்த வகையில் இன்று முதற்கட்டமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியுள்ளது. அவனியாபுரத்தில் இன்று 320 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகிறார்கள். ஆயிரம் காளைகள் இதில் பாய உள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழுவினர் என்பதன் அடிப்படையில் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்படுவர். 

 

ஒருவருக்கு ஒரு ஜல்லிக்கட்டு போட்டி என்ற முறை நடைமுறையில் உள்ளதால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகள் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்