!['' It should be canceled on the first day '' Resolution of the meeting of DMK MPs!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KAqooumLlrj_0CmSBa3LTsjLETtusUVayVX6xZG1PQo/1637473219/sites/default/files/inline-images/Z1047.jpg)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் திமுக நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.