Skip to main content

‘படித்தவர்கள் அல்ல; படிக்கின்றவர்களே சமூகத்திற்குத் தேவை’

Published on 30/11/2017 | Edited on 01/12/2017

‘படித்தவர்கள் அல்ல;
படிக்கின்றவர்களே சமூகத்திற்குத் தேவை’



 நமது சமூகத்திற்கு படித்தவர்கள் அல்ல. படிக்கின்றவர்களே தேவை என்றார் கவிஞர் நா.முத்துநிலவன். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமையன்று ‘மதிப்பெண்களைத் தாண்டிய அறிவு’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றியது:

’’பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பலர் தனக்கு சாதமான வேலையைத் தேடிக்கொண்டு தான் உண்டு. தன் குடும்பம் உண்டு என்று வாழ்கின்றனர். அதிகம் படிக்காதவர்கள்தான் நான்கு பேருக்கு நன்மை செய்யும் முறையில் வாழ்கின்றனர். படிப்பு வேறு. அறிவு வேறு. அறிவு என்பது மிகவும் நுட்பமானது. பள்ளிப்படிப்பு பறவைகள் கூண்டுக்குள் இருந்து வாழ்வதைப் போன்றது. தான் விரும்பிப் படிக்கும் புத்தகம் தானே கூடுகட்டி வாழ்வதைப் போன்றது. எனவே, பாடத்திட்டத்தைத் தாண்டிய வாசிப்பே நம் வாழ்க்கையை உயர்த்தும் என்றார்.

விழாவிற்கு பிவிஆர் நிறுவனங்களின் தலைவர் சேகரன் தலைமை வகித்தார். கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமுஎகச மாவட்டச் செயளலாளர் சு.மதியழகன் வரவேற்க, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராணயன் நன்றி கூறினார். இராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

-பகத்சிங்

சார்ந்த செய்திகள்