காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் விமானநிலையத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. வணிகர் சங்கப் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதேபோல், திமுக சார்பிலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் 3வது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ஒருசில இடங்களில் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் விமானநிலையத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.