Skip to main content

புதைப்பதை எதிர்ப்பதற்குக் காரணம் சட்டச் சிக்கலா ?  வெறுப்பு அரசியலா ?செந்தில் ஆறுமுகம்

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
ச்ட்

 

மறைந்த திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அண்ணா சமாதிக்குள் அடக்கம் செய்தவற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.  நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் மற்றும் சட்டச்சிக்கல் இருப்பதை காரணம் காட்டி இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு எதிராக திமுக தரப்பில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம்- பொதுச்செயலாளர்  செந்தில் ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில், 

’’புதைப்பதை எதிர்ப்பதற்குக் காரணம் சட்டச் சிக்கலா ?
வெறுப்பு அரசியலா ? 

அண்ணா சமாதிக்குள் யாரையும் புதைக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளதா ? - இல்லை.  

முதல்வராக இருக்கும்போது இறந்தால்தான் மெரினாவில் புதைக்க இடம் கொடுக்கப்படுமா ? - அப்படியொரு சட்டமில்லை

.  சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் ஒருவர் இறந்துவிட்டால், வழக்கமாக புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் இடம் அல்லாத ஒரு இடத்தில் இறந்தவரைப் புதைக்க முடியுமா? - முடியும். 

 

எப்படி ?

ஜெயலலிதா இறந்தபோது சென்னை மாநகராட்சி சட்டம் 1919, பிரிவு 319ன் கீழ் சென்னை மாநகராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டு, எம்.ஜி.ஆர். சமாதி அருகே புதைக்கப்பட்டார். 

எம்.ஜி.ஆர். இறந்தபோதும் அவர் மெரினாவில் புதைக்கப்படுவதற்காக ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது(சென்னை மாநகராட்சி தீர்மான எண்: 671/1988) 

அதேபோன்று, இன்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதன் அடிப்படையில் கருணாநிதி அவர்களை அண்ணா சமாதி அருகே புதைக்க முடியும். 

 

நீதிமன்ற தடையுமில்லை. சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டால் கருணாநிதியை அண்ணா சமாதிக்கு அருகே புதைக்க முடியும் என்ற முன்னுதாரணங்கள் உள்ளது. 

 

ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி சட்டம் 1919ன் பிரிவு 319ஐப் பயன்படுத்திய தமிழக அரசு கருணாநிதிக்காகப் இச்சட்டப் பிரிவை பயன்படுத்த மறுப்பது ஏன் ?

 

சட்டத்தில் இடமிருந்தும், அண்ணா சமாதி அருகே கருணாநிதியைப் புதைக்க தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் வெறுப்பு அரசியல் தவிர காரணம் ஏதுமில்லை என்று நினைக்கிறேன். ’’

 

சார்ந்த செய்திகள்