Skip to main content

கடைமடை விவசாயிகள் நிலங்களில் கருப்புக்கொடியேற்றி போராட்டம் 

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
bharathiraja

 

கடைமடை பகுதிகளுக்கு முறையாக காவிரி நீர் கொண்டுவராத பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, பாலையூரில்  விவசாயிகள் வயல்களில் கருப்பு கொடிகளை நட்டுவைத்து போராட்டம் நடத்தினர்.

 

மேட்டூர் நீரை நம்பி நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான செல்லூர் பாலையூர் சிக்கல் கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டனர். 

 

b

 

இந்நிலையில் காவிரியில் இருந்து கடைமடைக்கு வரும் தண்ணீர் நின்று போனதால் நாகை மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான பாலையூர் பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் காய்ந்து வெடிக்க தொடங்கியுள்ளன. கடைமடை பகுதிகளுக்கு முறையாக காவிரி நீர் கொண்டுவராத பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று பாலையூரில்  விவசாயிகள் வயல்களில் கருப்பு கொடிகளை நட்டுவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தேவ நதி மற்றும் வெட்டாற்றில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

 

 கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவர  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக அரசை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்