Published on 02/03/2021 | Edited on 02/03/2021

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு ஆகியவை, பெரிய அரசியல் கட்சிகளால் கூட்டணி கட்சிகளுக்குத் துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் (04.03.2021) முதல் நேர்காணல் செய்யப்பட இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த நேர்காணல் 4ம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.