
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று புதிய கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவிருக்கும் நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் பயனளிக்கவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும், இரவு ஊரடங்கு போன்ற கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் தலைமைச் செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.