தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை அரசுத்தரப்பும், மருத்துவர்களும் மர்மக்காய்ச்சல் என பெயர் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மர்ம காய்ச்சலால் ஒருவர் இறந்தபின்பே அதற்கு டெங்கு என பெயரிடுகின்றனர்.
தமிழகத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம்மே ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வளவு பேருக்கு என்கிற உண்மையான தகவலை அரசு நிர்வாகம் வெளியிடவில்லையென்றாலும் 5 ஆயிரம் பேருக்காவுது டெங்கு காய்ச்சல் பரவியிருக்கும் என்கிறார்கள் நிலவரத்தை அறிந்தவர்கள்.
குடியாத்தம் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா மருத்துவனைகளில் மர்ம காய்ச்சலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் தற்போது, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் ஐம்பதுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. இதில் பல குழந்தைகள் என்கின்றனர். குழந்தைகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீனாராஜேஷ் இன்னு வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுயிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் சுகாதாரத்துறையால் செய்யப்பட்ட நிலையில் திடீரென வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்துக்காண காரணமாக, அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த பேச்சு வார்த்தையால் வரவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.