Published on 12/12/2018 | Edited on 12/12/2018
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருவண்ணக்கொடியை ஏற்றினார், இரும்பிலாலான இந்த கொடிக்கம்பம் 2430 கிலோ எடை கொண்டது. 114 அடி உயரக் கொடிகம்பமான இது கோட்டை கொத்தளத்தில் உள்ள தேசியக் கொடிக் கம்பத்தைவிட உயரமானது. இந்தியாவிலேயே அரசியல் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரமான கொடி கம்பம் திமுகவினுடையது என்ற பெருமையையும் பெருகிறது.