Skip to main content
Breaking News
Breaking

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Income Tax officials raided 40 places in Tamil Nadu

 

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

சென்னையில் 5 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் சப்ளை செய்யும் மூன்று தனியார் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனங்கள் அனைத்திலும் பொருட்களை இறக்குமதி செய்ததற்கான முறையான கணக்குகள் இல்லாததுடன் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்கள் அனைத்தும் இன்று மாலைக்குள் வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்