தமிழக மீனவர்கள் இலங்கை நாட்டினரால் அடிக்கடி தாக்கப்படும் சம்பவம் வேதனையளிக்கிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை நாட்டினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற வன்முறை செயல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த முருகனுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 ரூபாய் வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.