தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊசி பாசிமணி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவர் சமூக பெண் ஒருவரிடம் சீண்டலில்ஈடுபட்டு அத்துமீறியிருந்தார் ஒரு மப்டி போலீஸ்காரர். அதுசமயம் அவரைத் தட்டிக் கேட்ட அவரது கணவரையும் அவர் லத்தியால் தாக்கியிருக்கிறார்.
அதைக் கண்டு ஆவேசமடைந்த பயணிகளையும் பொதுமக்களையும் அவர் மிரட்ட, மக்களோ அவரைப் பிடித்து அங்குள்ள. புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குடிபோதையிலிருந்த அவரை போலீசார், விசாரித்த போது, அவரின் பெயர் ராமச்சந்திரன், மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் போலீசாராகப் பணிபுரியும் அவர். பணிமுடிந்து கிராமம் திரும்புவர் பஸ்சுக்காக நின்ற கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
போலீஸ்காரர் என்பதால் அவரை எச்சரித்து நடவடிக்கையின்றி அனுப்பப்பட்டார். இந்த செய்தியை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. பத்திரிக்கையிலும் செய்தி வர, இதையறிந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதியரசர்கள் புகழேந்தி, கிருபாகரன் ஆகியோர் தாமதமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தவர்கள், பொறுப்பான பணியினை மேற்கொள்ளும் காவல்துறையினர் பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது குறித்து உள்துறை செயலாளர் டி.ஜி.பி. பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரிடம் அவசர அவசரமாகப் புகாரைப் பெற்ற டவுண் போலீசார் ராமசந்திரனைக் கைது செய்து சங்கரன்கோவில் நீதிமன்றனத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.