Published on 19/06/2021 | Edited on 19/06/2021

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (19/06/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக ஐந்து பேருக்கு நிவாரணம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் மூலம் 13,553 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூபாய் 5.42 கோடியை ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.