புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநராக இருக்கும் கிரண் பேடியும் ஒருவரை ஒருவர் விமர்சித்டு வருவது வழக்கமாகவே இருக்கிறது. என்னுடைய அரசு வேலைகளில் கிரண் பேடி தலையிடுகிறார் என்பது நாராயணசாமியின் குற்றச்சாட்டு, நான் அரசு வேலைகளில் தலையிடவில்லை அதுவும் என் வேலை நான் ஆளுநர் என்கிறார் கிரண் பேடி. இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்தும், குறை கூறியும் வருவது வழக்கமாகவே இருக்கின்றது.
இந்நிலையில் புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ஆளுநர் கிரண் பேடி ஒரு பேய் என்று விமர்சித்தார்.
இதற்கு கிரண் பேடி சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், “நிதி கட்டுப்பாடுகள் இருந்தாலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அதிகளவு நன்மை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. அனைத்தும் தனக்கே தேவை என பேய்கள் நினைக்கும். குறிப்பாக மக்களை பேய்கள் பயமுறுத்தும்.
அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பது தான். பேய் என்ற வார்த்தை தேவையில்லாதது. நாகரிகமற்றது. அருவருப்பானது. அந்த கருத்தை ஏற்கமுடியாது” என்று கூறியுள்ளார்.