![paruthipattu](http://image.nakkheeran.in/cdn/farfuture/us1yxS62IXc0Tk3Sg14JY73J87MxR2CQyOSxQJWLuUc/1596600980/sites/default/files/inline-images/xccfhfh.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் முதலே ஊரடங்கு என்பது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே ஆவடி பருத்திப்பட்டு பகுதி சாலைகளில் 24 மணி நேரமும் தாராளமாக மது விற்பனை சட்ட விரோதமாக நடந்து வந்திருக்கிறது தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை எந்த ஒரு தடையுமின்றி இந்த பகுதியில் மது விற்பனை திறந்தவெளியில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சாலை பகுதியிலேயே 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.