Published on 27/05/2021 | Edited on 27/05/2021
![ias officers transfer tn govt order](http://image.nakkheeran.in/cdn/farfuture/g2Oi3SitDy2dbYd1y_Yk6XfltN4g_nP5P-wMIl-G-gg/1622110595/sites/default/files/inline-images/tn%20govt%20%283%29_3.jpg)
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நிர்மல்ராஜ், தமிழ்நாடு கருவூலக் கணக்குத்துறை ஆணையராக வெங்கடேஷ், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக எல். சுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.