Skip to main content

ஹட்சன் ஹோட்டல்ஸ் பாதாள சாக்கடையில் உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு  இழப்பீடு வழங்க அறிவுறுத்தல்

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

 

 

    Hudson hotel

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே உணவு விடுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

 

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அருகே, ((ஹட்சன் ஹோட்டல்ஸ் என்ற)) தனியார் உணவு விடுதியில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் முருகேசன், மாரி மற்றும் உணவு விடுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

 

இச்சம்பவத்தில் மேலும் இருவர், மயக்கமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். 


சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் மாற்றம் இந்தியா பாடம் நாராயணன், தலைமை நீதிபதி அமர்வின் முன்பு கழிவுநீர் அகற்றுவது மற்றும் பாதாள சாக்கடை பணிகள் தொடர்பான தனது வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கோரிக்கை வைத்தார்.

 

அப்போது தலைமை நீதிபதி,  இதுதொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சட்டத்தையும் அரசு அமல்படுத்தி வரும் நிலையில், விழிப்புணர்வு கொடுத்தாலும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது  வேதனை தருவதாக தெரிவித்தார்.

 

ஸ்ரீபெரும்புதூர் உணவு விடுதியில்,  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது,  உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு, அந்நிறுவனம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பொது இடங்களில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தரவேண்டிய நிலுவையில் இருக்கும் வழக்கை, பிப்ரவரி 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும்  தெரிவித்து ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்