Published on 21/04/2018 | Edited on 21/04/2018

சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கும் ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் கூறிவந்தனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியை இழிவுபடுத்தி பதிவிட்ட ஹெச். ராஜாவை கைது செய்யக்கோரி மாநகர காவல் துறை ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.
பெண்மையை இழிவுபடுத்தும் விதமாகவும், புகழோடு இருக்கும் ஒருவரை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தியும், அவதூறு பரப்பியும் வருகின்ற ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என கோவை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி கூறினார்.