Skip to main content

நினைத்தால் அடுத்த நொடியே கைது செய்யலாம்-ஸ்டாலின் பேட்டி!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

 

சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு சென்று அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,

திமுக சார்பில் சட்டத்தை மீறி எங்கும் பேனர் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம்.சுபஸ்ரீ குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளேன். சுபஸ்ரீயின் தந்தை என்னிடம் பேனர் கலாச்சாரத்தால் நடந்த உயிரிழப்பு இதுவே கடைசியாக இருக்கட்டும் என கூறினார். ஏற்கனவே கோவையில் ரகு என்ற இளைஞரை பேனர் கலாச்சாரத்தால் நாம் இழந்தோம். இனி பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் அடையாளத்திற்கு அனுமதியுடன் ஒன்று இரண்டு வைக்கலாம் ஆனால் சட்டத்தை மீறி அனுமதியில்லாமல் பேனர் வைத்தால் கடமையான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் சுபஸ்ரீ குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு திமுக சார்பில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பேனர் வைத்த நபர் கைது செய்யப்படவில்லையே என்ற கேள்விக்கு,
 

நினைத்தால் அடுத்த வினாடியே கைது செய்யலாம் ஆனால் ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இதற்குமேல் இதனை அரசியல்படுத்த விரும்பவில்லை என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்