சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் நாகமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாய் திட்டத்தின் கீழ் 1 கீமீ துரத்திற்கு ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணி நடைபெறும் இடத்தில் தொழிற்நுட்ப உதவியாளர் மட்டும் இருந்துள்ளார். பணியை ஆய்வு செய்ய சம்பந்தபட்ட ஒன்றிய பொறியாளரோ, சாலை ஆய்வாளரோ இல்லை. இந்நிலையில் தார் சாலை தரமற்ற முறையில் போடப்படுகிறது என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சாலை அமைக்கும் இடத்தில் ஒன்றுகூடி சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினார்கள்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரவளர்ச்சி அதிகாரி தார் ஜல்லி குறைவாக உள்ள இடத்தில் மீண்டும் ஜல்லி வைத்து சரியான அளவில் சாலைஅமைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து குறைவாக உள்ள இடத்தில் ஜல்லிகொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் சாலை அமைக்கும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.