மோடி வித்தையால் இன்னும் எத்தனை உயிர்கள் போக போகிறதோ: புமுஇமுவினர் போராட்டம்!
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து, மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மாணவி அனிதா உயிரிழந்தது தற்கொலை அல்ல! அது படுகொலை! இதற்கு மோடியும், எடப்பாடியும்தான், காரணம் என சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர்- முன்னணி அமைப்பின் தலைமை தலைவர் ராஜா தலைமையில் சென்னை அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்சன் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருதிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இணைச்செயலாளர் சாரதி, இது போன்ற கொடூரம் இந்த மண்ணில் மட்டும் தான் நடக்கும். ஒரு அப்பாவி மாணவி தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்து, தன்னை ஒரு மருத்துவராகவே பாவித்து வந்த அனிதாவை இந்த ஆளும் வெக்கங்கெட்ட அரசு தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக பதவி பிரச்சினையில் பரிக்கப்பட்டு விட்டது.
இந்த ஏழை எளிய கூழித்தொழியின் மகளின் உயிர். மோடியின் வித்தையால் இன்னும் எத்துனை உயிர்கள் போக போகிறதோ! இழந்த அனிதா குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி ஏழு லட்சமும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் தருவதாக கூறியது. அவர்களை அவமானப்படுத்தும் நிலையாகத்தான் இது உள்ளது.
இது போன்ற பிரச்சனைகளை மாணவர்கள் தன்னை மாய்த்துக்கொள்ளாமல் அந்த பிரச்சனையுடன் போராட வேண்டும். அப்போது தான் இது போன்றவர்களுக்கு சவுக்கடி கொடுக்கமுடியும். இதை நாங்கள் விடமாட்டோம் தொடர்ந்து போராட்டம் வெடிக்கும். இதேபோல எஸ்.எப்.ஐ, போன்ற மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது முதல்வர் நீட்க்கு தீர்வுகானாமல் சலுகை தெரிவிப்பது வெட்க வேடு, முதல்வர் இதற்கு தீர்வு கானும்வரையிலும் விடமாட்டோம் என்றார்.
- அருண்பாண்டியன்