Skip to main content

புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது எப்படி?

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

திரவமாக்கப்பட்ட பெட்ரோல் வாயுவே (Liquefide Petroleum Gas) LPG எனப்படும் சமையல் எரிவாயு ஆகும். இது ஹைட்ரோ கார்பனின் கலவையாகும். இதை குறிப்பிட்ட அழுத்தத்தில் சிலிண்டரில் அடைத்து பயன்படுத்தலாம். 

வீட்டுக்கு புதிய கேஸ் இணைப்பு பெறுதல் : 
வீட்டு உபயோக கேஸ் இணைப்பு LPG இணைப்பானது. 14.2Kg/5Kg எடையில் கிடைக்கிறது. 5Kg எடையுள்ள சிலிண்டர்கள் சில மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதியில் கிடைக்கிறது. 

 

gas app



வீட்டுக்கு புதிய சமையல்  எரிவாயு இணைப்பு பெற தேவையான ஆவணங்கள் :

1. குடியிருக்கும் வீட்டு முகவரியின் ஆவணங்கள் ஏதேனும் ஒன்று.
2.ஆதார் அட்டை .
3. குடும்ப அட்டை.
4.மின் கட்டண ரசீது.
5. வீட்டு வரி ரசீது.
6.பாஸ்போர்ட் .
7.பான் கார்டு.
8.வங்கி கணக்கு புத்தகம்.
9.தொலைப்பேசி எண் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இவை அனைத்தும் நகல் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து சமந்தப்பட்ட கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதில் குடும்ப அட்டை கட்டாயம் தேவைப்படும்.  வங்கி கணக்கு எண் பதிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு வாங்கும் போது மத்திய அரசு சமந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு மானியம் செலுத்தும். எனவே வங்கி கணக்கு புத்தக நகலை கட்டாயம் சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும்.

சமையல் எரிவாயுக்கான இணைப்பு டெபாசிட் தொகைகள் :

1. 47.5Kg சிலிண்டருக்கு - ரூபாய் . 4700.
2. 19Kg சிலிண்டருக்கு - ரூபாய் 1700.
3. 14.2Kg சிலிண்டருக்கு - ரூபாய் 1450.
4. 5kg சிலிண்டருக்கு - ரூபாய் 350.
5. இணைப்பு கட்டணம் - ரூபாய் 50.
6. ரெகுலேட்டருக்கு - ரூபாய் 150.

அடுப்பு  விண்ணப்பித்துடன் தேவையான ஆவணங்களுடன் டெபாசிட் தொகையை செலுத்தி உடனடியாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். சிலிண்டர்கள் விநியோகிப்பவர்கள் அடுப்பு வைத்திருந்தாலும் அவரிடமே அடுப்பு பெற வேண்டும் என கட்டாயம் இல்லை. ஆனால் அடுப்பு , ரப்பர் குழாய் இரண்டும் ISI தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். விநியோகஸ்தர்களிடம் ரூபாய் 100யை செலுத்தி 7 நாட்களுக்குள் அதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இணைப்பு பரிசோதனை : 

சுதா - ஜோஷியின் பரிந்துரைப்படி , இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விநியோகஸ்தரிடம் ரூபாய் 25 யை செலுத்தி  , அனுப்பப்படும் சரியான நபர் மூலம் கேஸ் இணைப்பை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

சமையல் எரிவாயு இணைப்பை மாற்றம் செய்தல்.
ஒரே விநியோகஸ்தர் கீழ் முகவரி மாற்றம் :
முகவரியில் மாற்றம் ஏற்படும் போது , விநியோகஸ்தரிடம் புதிய முகவரிக்கான ஆவணத்தைக் கொடுத்து மாற்றம் செய்துக்கொள்ளலாம்.

ஒரே ஊரில் முகவரி மற்றும் விநியோகஸ்தர் மாற்றம் செய்வது எப்படி?

ஒரே ஊரில் இருக்கும் வேறொரு விநியோகஸ்தருக்கு மாறும் போது , நம்முடைய சந்தாதாரர் ரசீதியை (Subscription Voucher) கொடுத்தால் , புதிய விநியோகஸ்தருக்கு மாற்றம் ரசீதை (Transfer Termination Voucher) தயாரித்து கொடுப்பார். அவரிடம் புதிய குடியிருப்புக்கான ஆவணத்தைக் கொடுத்தால் , அவர் மாற்றுச்சந்தா ரசீதை (Transfer Subscription Voucher) கொடுப்பார். 

வெளியூருக்கு மாறுதல் செய்ய வேண்டுமா ? 

வெளியூருக்கு மாறுதல் செய்யும் போது இண்டேன் கருவிகள்  , சிலிண்டர்கள் மற்றும் ரெகுலேட்டருடன் மாற்று ரசீதையும் (Transfer Voucher) விநியோகஸ்தரிடம் கொடுத்தால் , டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம். பிறகு செல்ல வேண்டிய ஊரில் கேஸ் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.
 

gas connection

மகனுக்கோ / மகளுக்கோ மாற்றம் செய்ய வேண்டுமா ?
நுகர்வோர் தன் பெயரில் உள்ள இணைப்பை மகன் / மகளுக்கு மாற்றம் செய்ய தன் விண்ணப்பத்துடன் பின்வருவனவற்றை இணைத்து மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
1.மகள் / மகனின் KYC.
2. இருப்பிட சான்று.
3. SV ரசீது.
4. மகன் அல்லது மகளின் வாக்குமூலம்.

நுகர்வோர் இறந்துவிட்டப்பட்சத்தில் வாரிசுத்தாரருக்கு மாற்றம் செய்ய தன் விண்ணப்பத்துடன் பின்வருவனவற்றை இணைத்து இணைப்பை மாற்றம் செய்து கொள்ளலாம்.
1.வாரிசுத்தாரரின் KYC சான்று.
2. இறப்பு சான்றிதழ்.
3. வாரிசு சான்றிதழ்.
4. இருப்பிடச்சான்று.
5. வாரிசுத்தாரரின் வாக்குமூலம்.

மேலே குறிப்பிட்ட சந்தாதாரர் (Subscription Voucher) ரசீது , மாற்று முடிவு ரசீது ( TTV ) அல்லது மாற்று ரசீது (TV) தொலைந்துவிட்டால் , விநியோகஸ்தரின் அதற்கான விண்ணப்பப்படிவத்தின் மாதிரியை பெற்று ரூ 80 க்கான முத்திரை தாளில் , நோட்டரி அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று , அப்பகுதிக்கான பகுதி மேலாளரிடம் சமர்பித்து இணைப்பு ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

குறைத்தீர்ப்பு : 
சென்னையை சார்ந்த நுகர்வோர்கள் , 94440-85731 , 044- 28339035 எண்ணை அழைத்து , தங்கள் புகார் அல்லது குறைகளை பதிவு செய்யலாம். பிற மாவட்டங்களை சார்ந்த நுகர்வோர்கள் , 1800 425 5565 , 0422- 2247396 எண்ணை அழைத்து , தங்கள் புகார் அல்லது குறைகளை பதிவு செய்யலாம்.

மத்திய அரசின் "இலவச எரிவாயு இணைப்பு திட்டம்" பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றனர். இவை கேஸ் நிறுவனத்தின் உதவியுடன் மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றனர். இதற்கான முழு விவரங்களை அறிய இணைய தள முகவரி : http://www.pmujjwalayojana.com/ ஆகும்.


பி.சந்தோஷ் , சேலம் .
 

சார்ந்த செய்திகள்