![Heat wave for the next 5 days in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z7qse9gZwtj43eUmn4xlHQbrWPc2nhxRSsxXoaMe04c/1714637460/sites/default/files/inline-images/Untitled-14_26.jpg)
தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வருகிறது. இதனால் மகள் கடுமையான அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.