குட்கா முறைகேடு வழக்கில் இரு அதிகாரிகளின் மீதான ஜாமீன் மனு தள்ளூபடி செய்யப்பட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் செந்தில்முருகன், நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகிய இரு அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு கோரி இருந்தனர்.
இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது அப்போது இவ்விரு அதிகாரிகளின் முன் ஜாமீன் மனு கோரிக்கையை தள்ளூபடி செய்தது உயர்நீதிமன்றம்.
அதிகாரிகளின் தரப்பு, 45 நாட்களாக சிறையில் இருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். மேலும், சிபிஐ தெரிவித்த குற்றச்சாட்டிற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றனர்.
இந்நிலையில் சிபிஐ தரப்பு, விசாரணை முடிவடையாத நிலையில் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த குட்கா வழக்கில் மேலும், தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்தின் முன் ஜாமீன் மனு தேவையற்றது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் மனு கோரி இருந்தார் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத். மேலும் இவரது முன் ஜாமீன் வழக்கில் சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. அது என்ன என்றால், இதுவரை இவரின் மீது எந்த வழக்கு பதிவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.