Skip to main content

திமுக முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. மு.ராமநாதன் காலமானார்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

திமுக முன்னோடியும் முன்னாள் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினருமான மு.இராமநாதன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

 

   திமுகவின் மூத்த முன்னோடியான "கோவை தென்றல்" மு.இராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை காலமானார். இவருக்கு இராமகாந்தன் என்ற மனைவியும், பன்னீர்செல்வம், இளங்கோ, மு.ரா.செல்வராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். 2 மகன்கள் இறந்து விட்டனர்.
 

r

 

திமுக கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், கோவை மாநகர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகுத்தார். தற்போது வரை உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தார்.

 

 1993 ல் தலைவர் கலைஞர் இவருக்கு "அண்ணா விருது" வழங்கி கெளரவித்தார். 1970 முதல் 1976 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1985 ல் சட்டமன்ற உறுப்பினர். 1989 ம் ஆண்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் . 1996 ல் பாராளுமன்ற உறுப்பினர். மேலும், இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டப்பிரிவை எரித்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு  போராட்டங்களில் ஈடுபட்டு மிசா தண்டனை கைதி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்காக சிறை சென்றவர்.
 

சார்ந்த செய்திகள்