Published on 30/10/2022 | Edited on 30/10/2022
!['Governor Ravi should step down and talk'-DMK alliance parties insist](http://image.nakkheeran.in/cdn/farfuture/0ew2I8B9K5X4JkE7p-w0q10F5V_m8-QwjFqSYuAmtzM/1667134408/sites/default/files/inline-images/ii_6.jpg)
அண்மையில் திருக்குறள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசியது மற்றும் தொடர்ந்து சனாதனத்திற்கு ஆதரவாக ஆளுநர் பேசி வரும் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'தமிழக ஆளுநர் ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் என எதைப் பற்றி பேசினாலும் ஆளுநர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கிறது. பாஜக தலைமையை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால் ஆளுநர் ரவி பதவி விலகி விட்டு இதுபோன்ற கருத்துக்களை சொல்லட்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.