![100% Vote Registration! Government school students raise awareness!](http://image.nakkheeran.in/cdn/farfuture/B4qo2iHg7-aUBghgac1rUKBqrvix-HSm9ualuULIGMI/1644928299/sites/default/files/2022-02/th-2_33.jpg)
![100% Vote Registration! Government school students raise awareness!](http://image.nakkheeran.in/cdn/farfuture/c9vMWM5ehzMcOri31xkEHuu6K8PncZyOqwf4ZNcVfrQ/1644928299/sites/default/files/2022-02/th-1_44.jpg)
![100% Vote Registration! Government school students raise awareness!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ggGOZwwCu5UfqR3iN07W-KQC2MhaIJf-3jQz8-GndYk/1644928299/sites/default/files/2022-02/th_45.jpg)
Published on 15/02/2022 | Edited on 15/02/2022
தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிப்பில் கட்சியினரும், சுயேச்சைகளும் தீவிரமாக இயங்கிவருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு சமூக அமைப்புகளும் தன்னார்வலர்கள் குழுவினரும் தேர்தலில் 100% வாக்குப் பதிவு நடக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் இன்று சென்னை மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், அமைந்தகரை பகுதியில் ‘அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.... 100 சதவிகிதம் வாக்குப் பதிவு அவசியம்...’ என பொது மக்களிடம் கோரிக்கை வைத்து பொம்மலாட்டம் செய்து, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.