Published on 08/11/2018 | Edited on 08/11/2018

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்து சென்றது. அரசு பேருந்தின் பின்புறம் கரூரில் இருந்து சென்னைக்கு சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவருடைய மகன்கள் சிவராமன் மற்றும் ரித்திஷ் குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவராமன் மனைவி ஷாலினி படுகாயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் சிவராமன் மகன் 2 வயது குழந்தை ரக்சன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இதுபற்றி வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.