Skip to main content

10 மசோதாக்களுக்கும் ஒப்புதல்- அரசிதழில் வெளியீடு  

Published on 12/04/2025 | Edited on 12/04/2025
Approval of all 10 bills - publication in the Government Gazette

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப்  போடுவதாக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு அளித்திருந்தது.

அதில், 'தமிழக அரசின் பத்து மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக்  கொள்ளப்படும்' என தெரிவித்திருந்தது.

கடந்த  2023 நவம்பர் 18ஆம் தேதி 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பத்து மசோதாக்களும் அனுப்பப்பட்ட நாளான 2023 நவம்பர் 18ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட்டு இன்று அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்