Skip to main content

கலைஞருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்: திருவாரூர் மக்கள் கோரிக்கை!

Published on 11/08/2018 | Edited on 27/08/2018
fmk


திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான கலைஞரின் மறைவையொட்டி, திருவாரூரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடந்த இறங்கள் கூட்டத்தில், வரதராஜன் என்பவர் பேசுகையில், "தமிழுக்கும், தமிழகத்துக்கும் அளப்பரிய பணியாற்ற மிகப் பெரிய தூணாக விளங்கியவர். சரித்திரமாக வாழ்ந்த அவர் மாநிலச் சுயாட்சிக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றவர். மாநில நலனுக்காக பாடுபட்ட கலைஞரின் கொள்கைகளை சரியாக கடைபிடிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்." என்றார்.

அடுத்து பேசிய எஸ்.வி.டி. கனகராஜன் , "கலைஞரின் மறைவு திருவாரூருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. 2001-இல் திருவாரூரில் விஜயபுரம் வர்த்தகம் சங்கம் சார்பில் நடைபெற்ற பவளவிழால் பேசிய, கலைஞர் திருவாரூரில் தனது இளமைக் காலங்கள் குறித்து நினைவு கூர்ந்து பேசினார். எப்போதும் அவரை நினைவு கூர்வதே அவருக்கு நாம் செலுத்தும் கடமையாகும்." என்றார்.

வி.கே.கே. ராமமூர்த்தி என்பவர் பேசுகையில், "கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல. செம்மொழி மாநாடு நடத்தி, தமிழின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றார். திருவாரூருக்கு மத்தியப் பல்கலைக் கழகத்தை அமைத்து பெருமை சேர்த்தார். " என்றார்.

ஆர்.தெட்சிணாமூர்த்தி என்பவரோ "சிறிய கிராமமாக இருந்த திருவாரூரை மாவட்டமாக உயர்த்தி திருவாரூருக்கு பெருமை சேர்த்தவர். திருவாரூரில் உள்ள வீதிகளும், இங்குள்ள மக்களுக்கு அவர் செய்த திட்டங்களும், அவரைப் பற்றி என்றென்றும் நினைவு கூறும். 14 வயதில் போராட்டத்தை தொடங்கி 94 வயதில் போராட்டத்தை முடித்திருக்கிறார். செம்மொழி மாநாடு கண்ட அவருடைய கனவுகளை நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் நன்றி." என்றார்.

ஏ.கே.எம். செந்தில் பேசுகையில், "திருவாரூரில் உள்ள சாலைக்கு கலைஞரின் பெயர் வைக்க வேண்டும், அவருக்கு சிலை அமைக்க வேண்டும், திருவாரூரில் மணி மண்டபம் அமைக்க வேண்டும்," என்று பேசினார். இதையே பலரும் முன்மொழிந்து பேசினர். அதோடு கோரிக்கையாகவும் விடுத்தனர்.

சார்ந்த செய்திகள்