டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் இந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார்? இடைத்தரகர்கள் யார்? என தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது சிபிசிஐடி. ஆனாலும் இந்த வழக்கை சிபிசிஐடி வைத்து விசாரித்தால் உண்மை வெளியே வராது சிபிஐ விசாரணை வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிவகங்கையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வில் அந்த போலீஸ்காரரின் குடும்பத்தினர் 4 பேர் வெற்றி பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த போலீஸ்காரரின் குடும்பம் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதால் சந்தேகம் ஏற்பட போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.