Skip to main content

'கில்லி தவிர்க்க முடியாத புள்ளி தான்'- மருது அழகுராஜ் கருத்து

Published on 07/11/2024 | Edited on 07/11/2024
'Gilli is an inevitable point' - Maruthu Azhaguraj opined

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

tvk



இந்நிலையில் அதிமுகவின் மருது அழகுராஜ் எக்ஸ் வலைத்தள வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி  வருகிறது.

அந்தப் பதிவில்,

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்  என்கிற திமுக வின் நிலைப்பாடு..
அதே விஜய்யை விமர்சிக்க கூடாது  என்கிற எடப்பாடியின் உத்தரவு..

விஜய்யை தரம்தாழ்ந்து விமர்சிக்கும் சீமானின் பதற்றம்..

விஜய்யை முன்வைத்து திருமாவுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்..

தங்கள் சித்தாந்தத்தோடு மோதும் விஜய்யை எதிர்கொள்ள தீவிர திட்டமிடுதலில் பாஜக..

இப்படி ஒட்டுமொத்த கட்சிகளையும் ஒரு மாநாட்டை வைத்தே உதறலெடுக்க வைத்திருக்கிறார் விஜய் என்றால்

கில்லி  எதிர்கால தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத புள்ளி தான்..

என்ன நாஞ் சொல்றது..' என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்