நெருக்கடிக்கு மத்தியில் குமாி அ.தி.மு.க வை கிழக்கு மேற்கு என பிாித்து புதிய மாவட்ட செயலாளா்களை அறிவித்தாா்கள் இபிஎஸ் ஓபிஎஸ்.
கடந்த சட்டமன்ற தோ்தலில் குமாி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் அ.தி.மு.க இழந்ததால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா தளவாய்சுந்தரத்திடமிருந்து மாவட்ட செயலாளா் பதவியை பறித்து சசிகலாவின் பாிந்துரையின் போில் விஜயகுமாரை மாவட்ட செயலாளராக்கி அதோடு மேல்சபை எம்.பி யாகவும் ஆக்கினாா்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியிலும் இல்லாமல் இபிஎஸ் அணியிலும் இல்லாமல் இரண்டு அணிக்கும் ஆதரவாளன் என்ற ஓரு மாயை உருவாக்கி கொண்டு டிடிவி தினகரனிடம் மறைமுகமாக விசுவாசத்தை காட்டி வந்தாா் விஜயகுமாா். மேலும் மாவட்டத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அணியினாிடம் எந்த விதமான நெருக்கத்தையும் ஏற்படுத்தி கொள்ளாமல் இருந்த விஜயகுமாா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தனா்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளா்கள் கூட்டத்துக்கு பிறகு விஜயகுமாாிடமிருந்து மாவட்ட செயலாளா் பதவியை பறிக்க இபிஎஸ் ஓபிஎஸ் முடிவு செய்தனா். இதையறிந்த விஜயகுமாா் என்னிடமிருந்து பதவியை பறித்தால் நான் தினகரனிடம் செல்ல வேண்டியிருக்கும் மேலும் என்னிடமும் 4 எம்.எல்.ஏ க்கள் இருப்பதாகவும் மிரட்டல் விடுத்ததோடு இதற்கெல்லாம் தளவாய்சுந்தரம் தான் காரணம் என்று அவருக்கு எதிராக கிள்ளீயூா் ஓன்றிய செயலாரை சென்னையில் ஓபிஎஸ் வீட்டு முன் தீ குளிக்க முயற்சி செய்ய விஜயகுமாா் தூண்டி விட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் ஓபிஎஸ் விஜயகுமாாிடமிருந்து மாவட்ட செயலாளா் பதவியை பறித்தே தீர வேண்டுமென்று முடிவு எடுத்து இன்று புதிய மாவட்ட செயலாளா்களை அறிவித்தனா்.
அதன்படி ஓருங்கிணைந்த மாவட்டமாக இருந்த குமாியை கிழக்கு ,மேற்காக பிாித்து கிழக்கு மாவட்ட செயலாராக ஓபிஎஸ் ஆதரவாளா் அசோகனையும் மேற்கு மாவட்ட செயலாளராக இபிஎஸ் ஆதரவாளா் ஜான்தங்கத்தையும் நியமித்துள்ளனா். இது விஜயகுமாாின் ஆதரவாளா்களை அதிா்ச்சியடைய வைத்துள்ளது.