Skip to main content

அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்து தஞ்சை கும்பகோணம் சாலை!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

தஞ்சை கும்பகோணம் சாலையில் தினசரி இரண்டு மூன்று விபத்துக்களுக்கு குறைவில்லாமல் நடந்தபடியே இருக்கிறது, அதில் ஒன்று கொடுரமான விபத்தாக இருப்பது தான் வேதனை. இதற்கு தரமில்லாத சாலையே காரணம் என்கிறார்கள் பலரும்.



அந்த வகையில் நேற்று தனியார் பஸும், அரசு பேருந்தும் மோதிக்கொண்டதில் பத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

 Frequent accidents cause Tanjore Kumbakonam road



தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் தஞ்சையிலிருந்து கும்பகோணம் வரை செல்லும் அரசு பேருந்தின் மீது பின்னால் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆட்டோ மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் தஞ்சை கும்பகோணம் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

 

 

 Frequent accidents cause Tanjore Kumbakonam road



இதுகுறித்து சமுக ஆர்வளர் ஒருவர் கூறுகையில், " அடிக்கடி விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் மோசமான சாலைதான், சாலையின் இருபுறங்களும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகிவிட்டன. அதோடு திருச்சி,ஈரோடு, மதுரை, பழனி என மேற்கே செல்லும் வாகனங்கள், பேருந்துகளின் பிரதான சாலையாக இருப்பதால் நெரிசலுக்கு பஞ்சமே இருக்காது, இந்தநிலைமையில் தனியார் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றுபதற்காக அதிவேகமாக வந்து இப்படி தினசரி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். 

 

 

 

இதை அரசு அதிகாரிகள் நன்கு கவனத்தில் எடுத்துக்கொண்டு கன்கானிக்கவேண்டும்." என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்