Skip to main content

முன்னாள் எம்.பி பி.ஆர்.சுந்தரம் காலமானார்

Published on 16/01/2025 | Edited on 16/01/2025

 

Former MP PR Sundaram passed away

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும் முன்னாள் எம்.பியுமான பி.ஆர்.சுந்தரம் (73) காலமானார்.

பி.ஆர். சுந்தரம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். அதன் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நாமக்கல் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2021 ல் திமுகவில் இணைந்த பி.ஆர்.சுந்தரம் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1996 சட்டசபை தேர்தலில்  ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோற்றுப் போன நிலையில் அந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 4 பேர் மட்டுமே வென்றனர். அந்த 4 பேரில் ஒருவர் பி.ஆர். சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்