![Floods like rivers on the road ... Heavy rain to continue in Kumari!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-8bzCTwNe-YlgxFMwbG-PR_BGVVxE6owj4oEnpsHRII/1636778042/sites/default/files/inline-images/Z406.jpg)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
![FLOOD](http://image.nakkheeran.in/cdn/farfuture/V-BTtSGglLwiS1C6VGNAkwTqkdFC8nRPYWNIEYuvKwc/1636778906/sites/default/files/inline-images/Z409.jpg)
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கனமழை தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதுக்கடை அருகே உள்ள சரல்விளை பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள சாலையில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நீர் ஆறுபோல் ஓடுவதால் போக்குவரத்து சேவை அங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படைத் தேவையான மருத்துவ வசதிக்காக மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.