சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனை செல்வம் தலைமை தாங்கினார். விவசாயச் சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், சிஐடியு ஆட்டோ வட்ட செயலாளர் விஜய், விதொச மாவட்ட பொருளாளர் செல்லையா, ஒன்றிய செயலாளர் மனோகரன், விவசாயிகள் சங்க கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை, பரங்கிப்பேட்டை கொளஞ்சியப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
2021ல் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பெரிய பட்டியலிலிருந்து சி.முட்லூர் வரை நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும், சேதமடைந்த பயிர்களையும் முழு கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கைகளை முன்மொழிந்து கோஷங்களை எழுப்பினர்.