
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக் கோரியும் 25.05.2018 (வெள்ளிகிழமை) அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள் சார்பாக 25-5-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஜனநாயக ரீதியாக அறவழியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்களை உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.