Skip to main content

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இரு சக்கர வாகனப் பேரணி!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

farmers acts delhi farmers tenkasi district political parties leaders bikes rally


மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியரசுத் தினத்தையொட்டி, நேற்று டிராக்டர் பேரணியை நடத்திய விவசாயிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அவர்களை ஆதரித்து தென்காசியில் அனைத்துக் கட்சியினர் மற்றும் தி.மு.க. கூட்டணியினர் இணைந்து இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினர். தென்காசி நகரின் வெளிப் பகுதியான இலத்தூர் விலக்கில் துவங்கிய இரு சக்கர வாகனப் பேரணி, புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

 

farmers acts delhi farmers tenkasi district political parties leaders bikes rally


பேரணியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி நாடார், தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன், ம.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு தலைவர் சதன் திருமலைக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் டேனியல், மார்க்சிஸ்ட் கட்சியின் முத்துப் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கித்துரை மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்