திண்டுக்கல்லில் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொலை செய்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் இருந்து வருகிறது. இவர் பழங்களையும், பூண்டுகளையும் தட்டு வண்டியில் வாங்கி வைத்து வியாபாரம் செய்து கொண்டு குடும்பத்தையும் பார்த்து வருகிறார்.
இந்தநிலையில்தான் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக் சாப்பிட்டுவிட்டு அருகே உள்ள அனுமந்த நகர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கார்த்திக்கை மடக்கி மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை சரமாரியாக தாக்கிய நிலையில் கார்த்திக் உயிருக்கு பயந்து நான்கு புறமும் ஓட அந்த கும்பல் விரட்டி பிடித்து அரிவாள் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியது.
இதனால் ரத்தவெள்ளத்தில் கார்த்திக் கீழே விழுந்தவாரே இறந்தான். இந்த விஷயம் போலீசாருக்கு காதுக்கு எட்டியதின் பேரில் டிஎஸ்பி சுகாசினி தலைமையில் வந்த போலீஸார் படுகொலை செய்யப்பட்ட கார்த்திக் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு கார்த்திக்கை கொலை செய்த கும்பல் இரண்டு ஆயுதங்களையும் விட்டுச் சென்றதையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது...
படுகொலை செய்யப்பட்ட கார்த்திக் பிரபல ரவுடி அவன் மீது எனவே பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவல் சண்டை நடத்திய தகராறில் கார்த்திக் ஒரு சிலரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இவரது அண்ணன் செல்வம் என்பவரும் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர். இந்த வழக்கில் கார்த்திக் முக்கிய சாட்சியாக இருக்கிறான். இந்த நிலையில்தான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் மனைவி மற்றும் குழந்தையுடன் கோபால்பட்டியில் வசித்து வந்தவன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திண்டுக்கல் ரவுண்டுக்கு குடி வந்தான். ஏற்கனவே இருந்த முன்விரோதத்தால் தான் கார்த்திகை வெட்டி படுகொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறோம் என்று கூறினார்கள். இச்சம்பவம் திண்டுக்கல் நகரின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.