தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்த அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் . இதனால் அந்த கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று 'வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருக்கிறார்.
அதன்பின் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருக்கிறார். பாஜக சார்பில் போட்டியிடுவோருக்கான உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.