போலி போலீஸ் ஸ்டிக்கர் - கண்காணிக்க உத்தரவு
சென்னை அண்ணா சாலையில் ஒரு கருப்பு நிற இன்னோவா கார் வேகமாக சென்றது. காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. அந்த காரை தேனாம்பேட்டையில் பாண்டிபஜார் போலீசார் தடுத்து நிறுத்தினர். விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் திருமணம் ஒன்றிற்கு செல்வதற்காக சென்னை வந்துள்ளார். வழியில் டோல்கேட்டில் பணம் கட்டாமல் செல்வதற்காக இந்த ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார் என்றும், இவரது மைத்துனர் விழுப்புரம் ஆயுதபடை போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை கண்காணிக்குமாறு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்களாம்.
அரவிந்த்