எச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘பண்ருட்டி - விழுப்புரம் சாலை’ என்று ஒரு வீடியோ மற்றும் இரு புகைப்படங்கள் அடங்கிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் பண்ரூட்டி டூ விழுப்புரம் சாலை மோசமான நிலையில் உள்ளது என்ற தொணியில் அந்தப் பதிவு பரப்பப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இவை முற்றிலும் பொய்யானத் தகவல். முதலில் உள்ள புகைப்படம் 2018 ஆம் ஆண்டு ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியில் எடுக்கப்பட்டது. இரண்டாவதாக உள்ள காணொளி 2020 ஆம் ஆண்டே சீனாவில் எடுக்கப்பட்டது. மூன்றாவதாக உள்ள புகைப்படம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் மழையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.