
மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரிடம் கத்தியை காட்டி 2 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வசித்து வருபவர் கலைவேந்தன். இவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஆவார். இந்நிலையில் கலைவேந்தன் வீட்டிற்கு சென்ற 4 இளைஞர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். தமிழாசிரியர் வீடு அமைந்துள்ள அதேபகுதியில் இருந்த மற்றொரு வீட்டில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவில் சில நபர்கள் ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக தமிழாசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளில் கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் விக்னேஷ் மற்றும் சிறுவர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அஜய் என்ற மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.