Skip to main content

அரசு நிகழ்ச்சியில் வனத்துறை பெண் அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

Excitement over female forest officer fainting at government event

 

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திருச்சி மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

 

முன்னதாக காலையில் மரம் நடும் நிகழ்ச்சியானது காலை 8.50 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வனத்துறை அதிகாரி சுஜாதா தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதிகாலை முதல் உழவர் சந்தை மைதானத்தில் விழா ஏற்பாடுகளை செய்திருந்து காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் கே.என்.நேரு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருகே நின்றுகொண்டிருந்த வனத்துறை அதிகாரி சுஜாதா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக வனத்துறை மாவட்ட அலுவலர் சுஜாதாவை பெண் காவலர்கள் உதவியுடன் ஓய்வெடுக்க வேண்டி அரசு வாகனத்தில் படுக்க வைத்தனர். அரசு நிகழ்ச்சியில் அரசு அதிகாரி மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்