Skip to main content

கைத்தட்டிய கலெக்டர், எஸ்.பி. 

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

 


மனித குலத்தை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இன்று இந்தியா முழுக்க சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்த வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்தபடி மாலை 5 மணிக்கு அவர்களுக்கு கைதட்டி உற்சாகப்படுத்தும் நடவடிக்கை நாடு முழுக்க பல இடங்களில் நடந்தது.

 

Erode Collector, S.P.


 

அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகனேசன் மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா ஆகியோர் தங்களது குடும்பத்தினரோடு சேர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்களின் வீட்டு முன்பு நின்று கைதட்டினார்கள். இதன் பிறகு தான் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்கள் ஈரோடு உட்பட தனிமை படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது இதனால் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

 

சார்ந்த செய்திகள்