Skip to main content

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையும் காலியானது

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையும் காலியானது



இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை பெற்ற புதுக்கோட்டைக்கு வரலாறு சொல்லும் விதமாக இருந்த முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரில் பொது மருத்துவமனை, ராணியார் மகப்பேறு மருத்துவமனைகளை தொண்டைமான் மன்னார்களால் 167 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்காக நிறுவப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த மருத்துவமனைகளுக்கு ஆபத்து அரசு மூலமாகவே வந்துவிட்டது.

முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரில் இயங்கி வந்த பொதுமருத்துவமனையை கடந்த மாதம் இரவோடு இரவாக காலி செய்த நிர்வாகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனைத்து உபகரணங்களுடன் நோயாளிகளையும் அள்ளிச் சென்றது. 

அதே போல இன்று ராணியார் மகப்பேரு மருத்துவமனையையும் முழுமையாக காலி செய்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். 

நகரின் மையப்பகுதியில் பேருந்து வசதிகளுடன் செயல்பட்டு வந்த இரு மருத்துவமனைகளும் மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதுடன் மருத்துவக்கல்லூரிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் அரசு மருத்துவமனை மருத்துவர்களே நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பணத்தை வாரி இறைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

சுகாதரா துறை அமைச்சர் மாவட்டத்தில் இப்படி நோயாளிகள் அவதிப்படுவது அமைச்சர் கவணத்திற்கு தெரியுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் நோயாளிகளும் பொதுமக்களும். 

-இரா.பகத்சிங்.

சார்ந்த செய்திகள்