Skip to main content

மூன்றடுக்கு பாதுகாப்புடன் இமானுவேல் சேகரனின் நினைவு தினம்..!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
immanuvel


115 சிறப்பு சோதனைச் சாவடிகள், 75 மோப்பநாய்கள், கேமிரா பொருத்தப்பட்ட கண்கானிப்பு வாகனங்கள் மற்றும் ஆளில்லாவிமானம் மூலம் மாவட்டம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 61 ஆவது நினைவு தினம் துவங்கியுள்ளது.
 

immanuvel


பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் கொண்டாடப்படுகின்றது. தேவேந்திர குலப் பண்பாட்டு கழகத்தார் தன்னார்வத் தொண்டர்களாகக் களப்பணியாற்றி சிறப்பிக்கும் இவ்விழாவில் பல்வேறுக்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திய நினைவு நாளில், தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 5 டி.ஐ.ஜி, 17 எஸ்.பி, 19 ஏ.டி.எஸ்.பி , 48 டி.எஸ்.பி, 69 ஆய்வாளர்கள் உள்பட 4 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்புப் பணியினை மேற்கொள்ள பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

immanuvel


முதற்கட்டமாக, இன்று காலை இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூரில் இருந்து ஊர் பொதுமக்கள் அமைதி பேரணியாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நினைவு தினத்தை துவக்கி வைத்தனர். அதற்கடுத்து ஒவ்வொருவரும் அஞ்சலி செலுத்திய நிலையில் முன்னாள் அமைச்சரும், `தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப.தங்கவேலன் தி.மு.க.சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு, " இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாககவும், விடுமுறைநாளாகவும் அரசு அறிவிக்க வேண்டும்." என கோரிக்கையை வைத்தார். அதன் பின் ம.தி.மு.க.சார்பில் சதன் திருமலைக்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு தலைவர் வருகை தரவிருப்பதால் இங்கு பரப்பரப்புக்களுக்கு பஞ்சமில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் அறிவிப்புக்கு இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர் நன்றி

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Emmanuel Sekaran's family thanks the Chief Minister for his announcement

 

தியாகி இமானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பினைப் போற்றும் வகையில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

அதே சமயம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்ப்பன், பெரிய கருப்பன், மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) தளப் பதிவில், “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

இமானுவேல் சேகரனுக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு, இமானுவேல் சேகரன் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி, அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். முதல்வரின் அறிவிப்பு குறித்து சூரிய சுந்தரி பிரபா ராணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வரின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

திருச்சியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மரியாதை!

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Homage to martyrs Immanuel Sekaran photo in Trichy

 

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள கட்சி முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

Homage to martyrs Immanuel Sekaran photo in Trichy

 

இதனைத் தொடர்ந்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மண்டபத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 14  இணை ஜோடிகளுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு ரூபாய் 70,000 மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது.